சுடுநீரில் விழுந்த சுண்ணாம்பு

சுடுநீரில் சுண்ணாம்பு

என்றைக்காவது நீங்கள் குளிக்க செல்லும்போது பக்கெட்டில் விழுந்த சுண்ணாம்பு துகளை வெளியே எடுத்துப்போட முயற்சி செய்ததுண்டா? உங்கள் கைகளுக்குள் சிக்காமலேயே தண்ணீருக்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும்.

நீங்கள் மனம் தளராத மனிதரானால் அதை அப்புரப்படுத்திவிட்டுத்தான் மறுவேலையை பார்பீர்கள். அது ஒரு மணி நேரமானாலும் இரண்டு மணி நேரமானாலும்! இல்லையெனில் அதை அலச்சியப்படுத்திவிட்டு குளித்து சென்று விடுவீர்கள்.

இதுவே சுடுநீரில் சாத்தியமாகுமா?

நம் குழந்தை பருவமும் அப்படித்தான். சுடுநீரில் விழுந்த சுண்ணாம்பு துகளாக நம் கைகளுக்கு வளர்ந்த பிறகு வசப்படுவதில்லை.

நீங்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்திருந்தால் உங்களுக்கு முன்வந்தோருக்கும், உங்களுக்கு பின்வந்தோருக்கும் கிடைக்காத பல அபூர்வமான நினைவுகள் கிடைத்திருக்கும்.

பள்ளி முடிந்தபின், ரோட்டில் கிரிக்கெட் ஆடி கைகளிலும் கால்களிலும் பல காயங்களை சுமந்து வீட்டிற்க்கு ஒரு வீரனாய் திரும்பி வருவோம். பிறகு டிவியில் “பவர் ரேஞ்சர்ஸ்”-ஐ ஆரவாரத்துடன் கண்டு மகிழ்வோம். அது முடிந்தபின் சேனலை மாற்றி, “சக்திமான்” பார்ப்போம். ஆகா! ஆயிரம் “சூப்பர் ஸ்டார்” வந்தாலும் நம் “சக்திமான்” போல வருமா! வாரக்கடைசியில் நண்பர்களை கூட்டி “டபல்யு டபல்யு இ” கார்டுகளை வைத்து ஆடுவோம். பள்ளியில் கூட முதல் ரேங்கை தேடுவதில்லை ஆனால் கார்டு விளையாட்டில் முதல் ரேங்க் கார்டுக்காக கஷ்டப்பட்டது நமக்குத் தானே தெரியும்!

அனைவரும் அவரவர் முகத்தை பார்த்து விளையாடுவோம், மொபைலை பார்த்தல்ல! இவை அணைத்தும் மீண்டும் பெறவேண்டுமென்று சிவனை நினைத்து தவம் புரிந்தால் அவர், “இதை தவிற வேறேதேனும் கேள், தருகிறேன்!” என்பார்.

அப்பேர்ப்பட்ட பருவமது.

சில நாட்களுக்கு முன்பு என் தாயார் பீரோவை சுத்தப்படுத்துவதற்காக அணைத்து பைல்களையும், பைகளையும் வெளியில் எடுத்துவைத்திருந்தார்.

தற்செயலாக என் பள்ளி “குருப் ஃபோட்டோ”கள் இருந்த பை புலப்பட்டது. அதை பார்த்து நானும் என் தாயார் மற்றும் சகோதரியும் என் வளர்ச்சியையும் சக மாணவர்கள் பற்றியும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதை எல்லாம் கைபேசியில் புகைப்படமெடுத்து என் பள்ளி “வாஸ்ட் அப் குருப்”பில் அனுப்பினேன். அதை கண்டு நெகிழ்ச்சியடையவும், பிறரை கிண்டல் அடிப்பதுமாய் நாங்கள் பேசிக்கொண்டோம்.

“டேய், இதப்பாருடா!” என்று என் தாயார் கூச்சலிட, நான் பக்கத்தில் சென்றேன். வேறொரு பையில் நான் படித்த முதல் பள்ளியின் “குருப் ஃபோட்டோ” இருந்தது.

சென்னையில் நீண்ட நாள் மழையில்லாமல் திடீரென்று விட்டு விட்டு துளி மழை பெய்வது போல, அந்த வண்ணம் மங்கிய புகைப்படத்தில் இன்னும் மங்கிய முகங்கள் விட்டு விட்டு ஞாபகத்திற்கு வந்தன.

பனி சூழ்ந்த மலை பாதையில் சிறு அளவு சாலை தெரிவதுபோல, வந்த ஞாபகத்தின் மூலம் என் உயிருக்கும் மேலான இரு நண்பர்களின் பெயர்கள் அறிந்தேன். மேல் வரிசையில் வலது பக்கமாக இருவரும் சிரித்துக் கொண்டு நின்றனர், சோமுவும் கார்த்தியும்.

அவர்களை நினைக்கும் போது எனக்கு கண்ணீர் வந்தது.

அது அவர்களை இவ்வளவு வருடமாக பிரிந்ததற்காக அல்ல, அவர்களது தொடர்பை இழந்ததற்கு.

இரண்டாம் வகுப்பிலேயே நான் வேறு பள்ளி சென்றுவிட்டதாலும், அப்பொழுது சிறுவர்களான எங்களுக்கு தொலைபேசி எண்களை பரிமாரிக்கொள்ளும் அறிவு இல்லையென்பதாலும், பதின்மூன்று வருடம் ஓடிவிட்டதாலும் அவர்களை இழந்துவிட்டேன்.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எவ்வாறு இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. நான் உங்களை நினைப்பது போல நீங்களும் என்னை நினைக்கிறீர்களா இல்லையா என்றும் தெரியவில்லை.

தற்செயலாக நாம் சந்திக்கும் போது, வாழ்க்கையோடும் வேகத்தால் என்னை ஞாபகம் இல்லையென்று சொன்னால் என்னவாகும் என்று எண்ணி என் கண்ணீரும் வலிக்கிறது. ஆவியாகும் நீர் கூட மழையாக பெய்து தன் சுவடை சேராக விட்டுச்செல்கிறது. ஆனால், அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றது இந்த ஒரேயொறு புகைப்படம் தான்.

Still Yours
She probably remembers the first time you said, “Yes.” She was full …
கல் கடவுளான கதை
என்ன நேரம் இப்பொழுது? வெளியிலே இருட்டாகி விட்டதால் இதை இரவு என்று எண்ணிக் கொள்கிறேன். நான் …
The Falling of the Leaves
The hour of the waning of love has beset us,And weary and …
அன்புடன் அம்மாவுக்கு
நான் கண்களுக்குப் புலப்படாத ஒரு செல்லாக இருந்தபோது தான் நீ என்னை முதன்முதலாகக் கண்டாய். என் …
Loved it? Why not share it?

About the author

Aravindhan B

I am Aravindhan , an aspiring writer, lyricist and poet obsessed with writing.
This website will provide the readers with good content both in Tamil and English.

View all posts